ஸ்பெயினில் 24 மணி நேர கார்பந்தயத்தில் 3-வது இடம் பிடித்து அசத்திய அஜித் அணி...!
Ajiths team won 3rd place 24 hour car race Spain
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, உலக தரத்தில் கார் பந்தய வீரராகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் ‘தல’ அஜித்குமார்.
Good Bad Ugly திரைப்பட படப்பிடிப்பை முடித்த பிறகு, தனது முழு கவனத்தையும் கார்பந்தயத்துக்கு செலுத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து பந்தய உலகில் சாதனை படைத்து வரும் அஜித்குமார், தனது சொந்த அணியான “Ajith Kumar Racing”-ஐ தொடங்கி, துபாய், பெல்ஜியம் உள்ளிட்ட பல சர்வதேச பந்தயங்களில் பங்கேற்று வெற்றிகளை கைப்பற்றியுள்ளார்.
அண்மையில், ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற Creventic 24H எனும் பிரபல கார்பந்தயத்தில் Ajith Kumar Racing அணி பங்கேற்று, கடுமையான போட்டியைச் சமாளித்து 3-ஆம் இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
இந்த சாதனை, தமிழ் திரைஉலக ரசிகர்களை மட்டுமல்லாமல், உலக கார்பந்தய ரசிகர்களையும் பெருமைப்பட வைத்துள்ளது.
English Summary
Ajiths team won 3rd place 24 hour car race Spain