2 முறை கழன்று ஓடிய ரெயில் பெட்டி - பயணிகளின் கதி என்ன?  - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்திரா டெர்மினலில் இருந்து பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் நோக்கி பச்சிம் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 11.30 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரெயில் போரிவிலியை கடந்து மதியம் 1.19 மணியளவில் வான்காவ்–தகானு ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, திடீரென ரெயிலின் கடைசி இரண்டு பெட்டிகளின் இணைப்பு உடைந்து, தனியாக கழன்று சென்றன. 

இதனால் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் கத்திக் கூச்சலிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த எஞ்சின் ஓட்டுநர் உடனடியாக ரெயிலை நிறுத்திவிட்டு ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, ரெயிலில் இருந்து பிரிந்த பெட்டிகளை மீண்டும் இணைத்தனர். அதன் பின்னர், சுமார் அரை மணி நேரம் கழித்து எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மதியம் 2.10 மணியளவில், இந்த ரெயில் வாபி அருகே சஞ்சன் ரெயில் நிலையத்தை கடந்து சென்றபோது, அந்த இரண்டு பெட்டிகள் மீண்டும் கழன்று சென்றன. இதனைத் தொடர்ந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மீண்டும் நிறுத்தப்பட்டதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டிகளை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ரெயில் அமிர்தசரஸ் நோக்கி புறப்பட்டது. இரண்டு முறை ரெயில் பெட்டிகள் பிரிந்ததால் பயணிகள் அவதியுற்றனர். இந்தச் சம்பவத்தால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

express train box derails two times


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->