பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கும் பிரியங்கா சோப்ரா; கணவருடன் சேர்ந்து குவித்துள்ள சொத்து மதிப்பு இவ்வளவா..? - Seithipunal
Seithipunal


இந்திய சினிமா மட்டுமல்லாது ஹாலிவுட் வரைசென்று கலக்கி வரும் நடிகை பிரியங்கா சோப்ரா, கடந்த 2016-ஆம் ஆண்டு 'டைம்' இதழின் உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் இடம் பிடித்த பெருமையையும் பெற்றவர். அதேபோல ஃபோர்ப்ஸ் இதழின் உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலிலும் இவர் பெயர் இடம் பெற்றது.

தன்னைவிட இளையவரான, அமெரிக்க பாடகரான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். தற்போது குழந்தைக்கு தாயாகவும், தந்தையாகவும் உள்ள இந்த ஜோடி, உலக அளவில் பிரபலமான ஜோடிகளாக வலம் வருகின்றனர். இந்த தம்பதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சுமார் 170 கோடி ரூபாய் மதிப்பில், 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான அரண்மனை போன்ற வீட்டில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இவர்களது மொத்த சொத்து மதிப்பு சுமார் 1,250 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இதில் நடிகை பிரியங்கா சோப்ராவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு மதிப்பு மட்டும் 583 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. 'சிட்டாடல்' தொடருக்காக ஆண் நடிகருக்கு இணையாக 41 கோடி ரூபாய் சம்பளம் பெற்ற இவர், அனாமலி என்ற கூந்தல் பராமரிப்பு நிறுவனம், நியூயார்க்கில் சோனா என்ற உணவகம், டேட்டிங் செயலி மற்றும் பல்வேறு விளம்பரங்கள் மூலம் வருமானம் ஈட்டுகிறார்.

இவருடன், நிக் ஜோனஸின் சொத்து மதிப்பு 666 கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவர் ஜோனஸ் பிரதர்ஸ் இசைக்குழு, திரைப்படங்கள் மற்றும் 'வில்லா ஒன்' என்ற மதுபான நிறுவனம் மூலம் வருமானம் ஈட்டுகிறார். இருவரும் இணைந்து விளையாட்டு ஆடை நிறுவனம் மற்றும் உணவு நிறுவனங்களில் முதலீடு செய்து, தங்களது சொத்து மதிப்பை பன்மடங்கு பெருக்கியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Priyanka Chopras net worth


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->