‘போக்கிரி’யில் விஜய்யுடன் நடனம் ஆட மறுத்த பிரபுதேவா!பேசி மனதை மாற்றிய காமெடி நடிகர் – பின்னணி கதை வைரல் - Seithipunal
Seithipunal


பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடித்த முதல் படம் போக்கிரி. 2007ஆம் ஆண்டு வெளியான இந்த படம் மெகா ப்ளாக்பஸ்டராக மாறி, விஜய்யின் கமர்ஷியல் இமேஜை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியது. அந்த வெற்றியின் அடிப்படையில்தான், பிரபுதேவா – விஜய் கூட்டணி மீண்டும் வில்லு படத்தில் இணைந்தது. ஆனால், வில்லு அந்த அளவுக்கு வரவேற்பைப் பெறாமல் தோல்வியை சந்தித்தது.

நடன இயக்குநராகவும் நடிகராகவும் உச்சத்தில் இருந்த பிரபுதேவா, தெலுங்கில் சித்தார்த் – திரிஷா நடித்த ஒரு படத்தை இயக்கி வெற்றி கண்டிருந்தாலும், தமிழில் இயக்குநராக முழு கவனம் செலுத்தவில்லை. அப்படிப்பட்ட சூழலில்தான், விஜய்யுடன் இணைந்து போக்கிரி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த போக்கிரி படத்தின் ரீமேக்காக உருவான இந்த படம், ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு தேவையான ஆக்‌ஷன், ரொமான்ஸ், காமெடி, மாஸ் எல்லாவற்றையும் சரியான அளவில் கலந்திருந்தது.

ஒவ்வொரு காட்சியையும் மாஸாக செதுக்கிய பிரபுதேவாவும், அதற்கு சமமாக விஜய்யும் தனது நடிப்பால் படத்தை உச்ச வெற்றிக்கு கொண்டு சென்றனர். இசை, திரைக்கதை, காமெடி, வசனம் என அனைத்தும் ஒர்க் அவுட் ஆன படம் இது. குறிப்பாக மணி ஷர்மாவின் இசை, ரசிகர்களை தியேட்டரில் இருக்க விடாமல் ஆட வைத்தது.

அதில் முக்கியமானது ஓபனிங் பாடல் ‘ஆடுங்கடா என்னை சுத்தி’. இந்த பாடல் இன்றும் விஜய் ரசிகர்களுக்குப் பிரத்தியேகமான ஒன்றாக உள்ளது. கபிலன் எழுதிய வரிகள் சமூகத்தை நோக்கி கேள்வி எழுப்பும் விதமாக இருந்தது. அதோடு, விஜய் – பிரபுதேவா இருவரின் நடனமும் சேர்ந்து பாடலை இன்னும் உயரத்திற்கு எடுத்துச் சென்றது.

ஆனால், இந்த பாடலில் விஜய்யுடன் நடனம் ஆடுவதற்கு பிரபுதேவா முதலில் மறுத்திருந்தார் என்பது தற்போது வைரலாகி வரும் தகவல். விஜய்க்கு, “பிரபுதேவாவுடன் ஒரே ஃப்ரேமில் நடனம் ஆட வேண்டும்” என்ற ஆசை இருந்ததாக கூறப்படுகிறது. அதை நேரடியாகச் சொல்லாமல், பிரபுதேவாவுக்கு நெருக்கமான நடிகர் வையாபுரியிடம் விஜய் கூறியிருக்கிறார்.

வையாபுரியும், ஸ்ரீமனும் சேர்ந்து இந்த விஷயத்தை பிரபுதேவாவிடம் எடுத்துச் சொன்ன போது,
“வேண்டாம்… பாடல் நடனத்தில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்வோம். ஆனால் நான் அவருடன் தோன்ற வேண்டாம்” என்று அவர் மறுத்ததாக சொல்லப்படுகிறது.

இருந்தாலும், விடாமல் வையாபுரியும் ஸ்ரீமனும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததால், கடைசியில் பிரபுதேவா ஒத்துக் கொண்டாராம். இந்த சுவாரஸ்யமான பின்னணி கதையை வையாபுரி ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டதுதான், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்று திரும்பிப் பார்த்தால், விஜய் – பிரபுதேவா இருவரும் ஒரே ஃப்ரேமில் ஆடிய அந்த பாடல் தான் போக்கிரி படத்தின் அடையாளங்களில் ஒன்றாக மாறி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prabhu Deva refused to dance with Vijay in Pokkiri The comedian changed his mind after talking to him the backstory goes viral


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->