நடிகர் மாதவனுக்கு 'பத்ம ஸ்ரீ' விருது அறிவிப்பு; வாழ்த்துக்களை குவிக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்..!
Actor Madhavan announced to receive the Padma Shri award
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.
குறிப்பாக, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிவோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கபட்டது. இந்நிலையில் சமீபத்தில் மறைந்த நடிகர் தர்மேந்திரா மற்றும் நடிகர் மம்மூட்டி, நடிகர் மாதவன் ஆகியோருக்கு 2026 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சினிமாவில் (கலை) மலையாள நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் ஷிபு சோரனுக்கு 'பத்ம பூஷன்' விருதும், மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திர சிங் தியோலுக்கு பத்ம விபூஷண்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அல்கா யாக்னிக் (பாடகி) 'பத்ம பூஷண்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் நடிகர் மாதவன், பிரசென்ஜித் சட்டர்ஜி (நடிகர்) மற்றும் சதீஷ் ஷா (மறைந்த நகைச்சுவை நடிகர்) ஆகியோருக்கு 'பத்ம ஸ்ரீ' விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா, வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்கு 'பத்ம ஸ்ரீ விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க வித்வான் பக்தவச்சலம், சேலத்தைச் சேர்ந்த ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர் உட்பட 11 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின விழாவிற்கு முன்னதாக விருதுகள் அறிவிக்கப்பட்டாலும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த ஆண்டின் பிற்பகுதியிலேயே குடியரசுத் தலைவர் மாளிகையில் பதக்கங்களை வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Actor Madhavan announced to receive the Padma Shri award