'நாட்டில் லட்சாதிபதி மகளிர் எண்ணிக்கை 03 லட்சம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறது'; மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் பேச்சு..! - Seithipunal
Seithipunal


டெல்லியில் மத்திய கிராமப்புற வளர்ச்சி, வேளாண் மற்றும் விவசாயிகளின் நலன்கள் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மகளிரை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களின் தலைவிகள் மற்றும்  லட்சாதிபதி மகளிர் 400 பேர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 'வந்தே மாதரம்' தேசிய பாடலின் 150 ஆண்டுகால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அனைவரும் அதனை ஒன்றாக பாடியதோடு, நிகழ்வில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறியதாவது:

இந்த குடியரசு தினம் என்பது மக்கள் மற்றும் சுய உதவி குழுக்களின் லட்சாதிபதி மகளிரின் உத்வேக பயணத்திற்கான கொண்டாட்டம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், நாடு முழுவதும் உள்ள சுய உதவி குழுக்களின் மகளிரை வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளதோடு, பிற மகளிருக்கு அதிகாரமளிக்கும் அவர்களுடைய நம்பிக்கை, தலைமையை மற்றும் முயற்சிகளை பாராட்டுகிறேன் என்றும் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

 மேலும்,நாட்டில் லட்சாதிபதி மகளிர் எண்ணிக்கையானது 02 லட்சத்தில் இருந்து 03 லட்சம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Minister Shivraj Singh Chouhan stated that the number of women millionaires in the country is moving towards the target of 3 lakhs


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->