'கால்களையே பார்த்தால் சூரியன் தெரியாது; நிமிர்ந்து பார்த்தால் தான் தெரியும்'; எடப்பாடி பழனிசாமியை மோசமாக விமர்சித்த மு.க.ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவது வழக்கமாகவுள்ளது.

அந்தவகையில், பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செய்து உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது: பிரதமர் மோடியுடன் இருப்பவர் சாதா பழனிசாமி அல்ல, தி கிரேட் பத்து தோல்வி பழனிசாமி என்று விமர்சித்துள்ளார். அத்துடன், 'எடப்பாடி பழனிசாமி சொல்கிறார், பிரதமர் தமிழகம் வந்ததும் சூரியன் மறைந்து விட்டதாக; வாழ்க்கை முழுவதும் கால்களையே பார்த்தால் சூரியன் தெரியாது; நிமிர்ந்து பார்த்தால் தான் சூரியன் தெரியும் பழனிசாமி அவர்களே.. என்று குறிப்பிட்டுள்ளதோடு, ஒருமுறையாவது நிமிர்ந்து பாருங்கள் அப்போதுதான் சூரியன் தெரியும், அதனின் வெப்பமும் தெரியும் என்று பேசியுள்ளார்.

அத்துடன், தமிழ்நாட்டு மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும், பாஜக அரசின் வஞ்சகத்தை தட்டிக்கேட்கும் தைரியம் திமுகவுக்கு மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளார். தமிழ் பண்பாட்டை அழிக்க நினைக்கும் சக்திகளை எதிர்த்து வெற்றி பெறுவோம் என்றும், டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைவணங்காது, தீ பரவட்டும்.. என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MK Stalin criticized Edappadi Palaniswami saying that one cannot see the sun if they only look at their feet


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->