என்னங்க இது! மாலையும் கழுத்துமாக பார்வதி - கமருதீன்! கல்யாண பாட்டு ஜோடியாக ஆட்டம்.. என்ன நடந்தது?
Parvati Kamaruddin with garlands around their necks Dancing as a couple in a wedding song What happened
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 முடிந்து ஒரு வாரம் கடந்துவிட்டாலும், அந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் குறித்த பேச்சுகள் இன்னும் ஓயவில்லை. அவர்கள் எங்கு செல்கிறார்கள், யாருடன் செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதெல்லாம் ரசிகர்களின் கூர்ந்த கவனத்தில் உள்ளது. இந்த சீசனில் டைட்டிலை திவ்யா கணேஷ் வென்றிருந்தாலும், சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுபவர்கள் என்றால் விஜே பார்வதியும் கமருதீனும் தான்.
இருவரும் பிக்பாஸ் வீட்டில் ரெட் கார்டு பெற்று வெளியேறியபோது, ஒரு தரப்பினரிடமிருந்து கடும் விமர்சனங்களை சந்தித்தனர். அதே நேரத்தில், அவர்களுக்கு ஆதரவாக பேசும் ரசிகர்களும் தொடர்ந்து இணையத்தில் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள், பார்வதி – கமருதீன் இருவரையும் மீண்டும் கவனத்தின் மையமாக மாற்றியுள்ளது.
பார்வதியின் ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அவர் காரில் வந்தபோது, ரசிகர்கள் மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். காருக்குள் இருந்தபடியே பார்வதியும் உற்சாகமாக ஆடியபடி ரசிகர்களை வாழ்த்தினார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி, “டைட்டில் வின்னருக்கே இவ்வளவு வரவேற்பு கிடைக்கவில்லையே” என பலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
மற்றொரு பக்கம், கமருதீன் தனது ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசும்போது, திருமணம் குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார். “நான் ஜாலியானவன். எப்போதும் அன்பாக ‘என்னங்க, மாமா’ என்று அழைக்கும் அமைதியான மனைவி வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது தைரியமான சிங்கம் போல ஒரு பெண் மனைவியாக கிடைக்கப் போகிறார்” என்று அவர் கூறியது ரசிகர்களிடையே சிரிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
இந்த இரண்டு நிகழ்ச்சிகளின் உச்சமாக, பார்வதி மற்றும் கமருதீன் இருவரும் ஒரே மேடையில் மாலையும் கழுத்துமாக, ‘பாக்கு வெத்தல மாத்தி இப்போ பொண்ணு வந்தாச்சு’ என்ற பாடலுக்கு ஜோடியாக நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், “இருவரும் கல்யாணமே செய்துகொண்டார்கள் போலயே” என சந்தேகமும் கிண்டலும் கலந்து கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீடு முடிந்தாலும், பார்வதி – கமருதீன் ஜோடி உருவாக்கும் சர்ச்சையும் ஆர்வமும் இன்னும் தொடர்கிறது என்பதையே இந்த நிகழ்வுகள் உறுதி செய்கின்றன.
English Summary
Parvati Kamaruddin with garlands around their necks Dancing as a couple in a wedding song What happened