என்றும் இளமை…! ஸ்ரீதேவியின் அழகு ரகசியத்தை வெளிச்சம் போட்ட ஜான்வி...!
Forever young Janhvi reveals Sridevi beauty secret
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழித் திரையுலகங்களில் தனி முத்திரை பதித்தவர் நடிகை ஸ்ரீதேவி. “இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார்” என்ற பெருமை பெற்ற அவர், 1967 ஆம் ஆண்டு வெளியான ‘கந்தன் கருணை’ திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.

சிறுமியாக தொடங்கிய அந்த பயணம், பின்னாளில் இந்திய திரையுலகின் உச்ச சிகரமாக மாறியது.அழகு, நடிப்பு, ஆளுமை மூன்றிலும் தனிச்சிறப்பு கொண்ட ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையிலும் நிலைபெற்றார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர்.
ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த ஸ்ரீதேவி, 2018 ஆம் ஆண்டு 54 வயதில் காலமானது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது.எப்போதும் இளமையின் ஒளியுடன் ஜொலித்த ஸ்ரீதேவியின் அழகு ரகசியம் என்ன? இந்த கேள்விக்கு தற்போது அவரது மகள் ஜான்வி கபூர் அளித்த ஒரு பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பேட்டியில் ஜான்வி தெரிவித்ததாவது,"எங்கள் வீட்டில் காலை உணவில் பழங்கள் கட்டாயம் இருக்கும். மீதமிருக்கும் பழங்களை ஜூஸாக்கி அம்மா முகத்தில் தடவி கொள்வார். சிறிது நேரம் கழித்து அதை கழுவினால் முகம் பளபளப்பாக மாறிவிடும். பழங்களில் உள்ள இயற்கை சத்துக்கள் இறந்த செல்களை நீக்கி, தோலுக்கு புத்துணர்ச்சி தரும். இந்த பழக்கத்தை அம்மா தொடர்ந்து கடைப்பிடித்தார்.
இப்போது அதையே நானும் பின்பற்றுகிறேன். இதுவே அம்மாவின் இளமை ரகசியம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.அழகு சலூன் இல்லாமலே… இயற்கையின் சக்தியால் இளமை காத்த சூப்பர் ஸ்டாரின் ரகசியம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Forever young Janhvi reveals Sridevi beauty secret