சபாநாயகர் அறையில் ரகசிய அரசியல்! OPS - சேகர்பாபு 15 நிமிட சந்திப்பு...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவை கடந்த 20-ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வந்தது. இறுதி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் உரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

ஆனால், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இந்த நாளின் அமர்வை முற்றிலும் புறக்கணித்து வெளியேறியது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்தது.இதற்கிடையே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அவருக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏ. அய்யப்பனும் அவையில் கலந்து கொண்டனர்

கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் அறைக்கு சென்ற ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சந்தித்து பேசினார்.இந்த திடீர் சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில், தி.மு.க.வில் இணையுமாறு ஓ.பன்னீர்செல்வத்தை சேகர்பாபு வலியுறுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அதற்கு பதிலாக, தன்னுக்கும், தனது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பனுக்கும், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும் வரவிருக்கும் தேர்தலில் சீட் வழங்க வேண்டும் என்றும், தனது மகன் ரவீந்திரநாத்துக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கோரிக்கைகளுக்கு தி.மு.க. தரப்பில் இருந்து சாதகமான சைகை கிடைத்தால், ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணையும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்துள்ள நிலையில், இந்த சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Secret political discussions Speaker chamber OPS Sekarbabu 15 minute meeting


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->