மும்பையில் பரபரப்பு! சினிமா வில்லன்… நிஜ வாழ்க்கையில் துப்பாக்கிச் சூடு! நடந்தது என்ன...?
Panic in Mumbai film villain involved real life shooting What happened
மும்பை அந்தேரியில் உள்ள ஒஷிவரா குடியிருப்பு வளாகத்தில் கடந்த 18-ஆம் தேதி திடீரென ஒலித்த துப்பாக்கிச் சத்தம், அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அமைதியாக இருந்த குடியிருப்பில் நடந்த இந்த மர்ம துப்பாக்கிச் சூடு, பெரும் பரபரப்பை ஏற்படுத்த, போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்கினர்.

“சுட்டது யார்?” “எதற்காக?” என்ற கேள்விகளுடன் பல கோணங்களில் விசாரணை நடத்திய போலீசார், தடயவியல் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அதிர்ச்சி தரும் தகவலை கண்டுபிடித்தனர்.
அந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னால் இருந்தவர், பிரபல பாலிவுட் நடிகரும் தயாரிப்பாளருமான கமல் ரஷித் கான் என்பதே தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருக்கும் கமல் கான், “துப்பாக்கி சரியாக இயங்குகிறதா என்பதை பரிசோதிப்பதற்காக மட்டுமே சுட்டேன்” என்று போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளார்.
ஆனால் இந்த விளக்கம் உண்மையா? அல்லது வேறு காரணம் உள்ளதா? என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வில்லன் மற்றும் துணை கதாபாத்திரங்களில் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ள கமல் கான், சில திரைப்படங்களை தயாரித்த அனுபவமும் கொண்டவர்.
திரையுலகப் பிரபலத்தின் இந்த நடவடிக்கை, சினிமா வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Panic in Mumbai film villain involved real life shooting What happened