தே.மு.தி.க. சீட் டிமாண்ட்… இத்தனை தொகுதிகளா? கோரிக்கை கேட்டு திகைப்பு… DMK–AIADMK அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அடுத்த மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவை கட்சிகளுக்கு அவசரப் பணிகளாக மாறியுள்ளன.

இந்த முறை தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி உறுதியாகியுள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு அணி, எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணி, த.வெ.க. தலைமையில் மூன்றாவது அணி, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என அரசியல் மேடை நான்கு திசைகளாகப் பிரிகிறது.

பலமான கூட்டணியுடன் தி.மு.க. களம் காணத் தயாராகியுள்ளது. ஏற்கனவே உள்ள கூட்டணியுடன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இணைந்திருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.மற்றுபுறம், அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியும் வேகமாக முன்னேறுகிறது.

பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா. உள்ளிட்ட பல சிறு கட்சிகள் இந்த அணியில் இடம் பிடித்துள்ளன.ஆனால், தே.மு.தி.க. மட்டும் இன்னும் முடிவெடுக்காமல் குழப்பத்தில் உள்ளது.

தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரு தரப்புடனும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் தே.மு.தி.க., ஆரம்பத்தில் அதிக தொகுதிகள், மாநிலங்களவை சீட், தேர்தல் செலவுக்கே ரூ.10 கோடி வரை கோரியதாக கூறப்படுகிறது.

இரு பெரிய கட்சிகளும் கறாராக மறுத்ததால், தற்போது தே.மு.தி.க. கோரிக்கையை குறைத்து 10 தொகுதிகள் என்ற எண்ணில் நிற்கிறது.

இருப்பினும், இன்னும் கூட்டணி முடிவை அறிவிக்காமல் காலம் கடத்தி வருகிறது. காங்கிரஸ் தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகினால் அதிக தொகுதிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தே.மு.தி.க. காத்திருப்பதாகவும் பேசப்படுகிறது.

இதற்கிடையே, பா.ஜ.க. தரப்புடன் நடந்த பேச்சுவார்த்தையில் பிரேமலதா விஜயகாந்த் தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கோரியதாக தகவல் வெளியானதும், அந்த பேச்சு அங்கேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இனி, தே.மு.தி.க. கோரிக்கைகளை குறைத்தால் மட்டுமே கூட்டணி கதவுகள் திறக்கும் என்ற நிலை உருவாகியுள்ளது. தமிழக தேர்தல் அரசியல், நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMDK seat demand many constituencies request caused astonishment DMK and AIADMK shocked


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->