வெயிட் பண்ணுங்க..பெரிய சர்ப்ரைஸ் இருக்கு! அஜித் 64 குறித்து அப்டேட் குடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்!
Wait there a big surprise Adhik Ravichandran gives an update on Ajith 64
அஜித் ரசிகர்கள் மங்காத்தா படத்தின் ரீ ரிலீஸை புதிய படத்தின் வெளியீட்டைப் போலவே உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். 2011ஆம் ஆண்டு வெளியான இந்த மெகா ப்ளாக் பஸ்டர் படம், வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50வது படமாக உருவானது. ரீ ரிலீஸ் கலாச்சாரம் வலுப்பெற்ற பிறகு, ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மங்காத்தா ரீ ரிலீஸ், இந்த ஆண்டு எதிர்பாராத நேரத்தில் அறிவிக்கப்பட்டு இன்று திரையரங்குகளில் வெளியானது.
இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் (Twitter) பக்கத்தில் “King Maker is Back” என்று பதிவிட்டதுடன், ரீ ரிலீஸ் உறுதி செய்யப்பட்டது. வெளியான நாளே படம் ரசிகர்களிடையே வேற லெவல் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வடபழனியில் உள்ள கமலா தியேட்டரில் நடந்த சிறப்பு காட்சியில், வெங்கட் பிரபு, மகத், பிரேம்ஜி, அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, Good Bad Ugly படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தனர்.
இந்த நிகழ்வின் போது, அஜித்தின் 64வது படத்தை இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரனிடம் அந்த படம் குறித்த அப்டேட் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:“அஜித் 64-ல் ரசிகர்களுக்கு நிறைய சர்ப்ரைஸ்கள் இருக்கும். ஃபேமிலி ஆடியன்ஸ்க்கும் பிடிக்கும் வகையில் படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளோம். இசையமைப்பாளர் தொடங்கி நடிகர் பட்டியல் வரை அனைத்தும் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.”
ஆதிக்கின் இந்த கருத்துகள் அஜித் ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. மங்காத்தா ரீ ரிலீஸ் வெற்றியோடு சேர்ந்து, அஜித் 64 குறித்த ஆர்வமும் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.
English Summary
Wait there a big surprise Adhik Ravichandran gives an update on Ajith 64