இந்தோனேசியாவில் சோகம்! கரைகளை உடைத்த வெள்ளம்… வீடுகளை விழுங்கிய மண்..! - 8 பலி 82 பேர் மாயம்
Tragedy Indonesia Floods breached embankments houses swallowed by mud 8 dead 82 missing
இந்தோனேசியாவின் ஜாவா தீவு கனமழையால் பேரழிவின் மையமாக மாறியுள்ளது. மேற்கு ஜாவா மாகாணத்தின் மேற்கு பாண்டுங் மாவட்டத்தில் உள்ள பசிர் லாங்கு கிராமத்தில் இடைவிடாத மழையால் ஆறுகள் சீற்றமடைந்து கரைகளை உடைத்து வெள்ளமாகப் பாய்ந்தன.
வெள்ள நீருடன் சேறு, பாறைகள், மரக்கட்டைகள் மலைப்பகுதிகளில் இருந்து கீழே பாய்ந்து வந்து, 34 வீடுகளை மண்ணோடு மண்ணாக்கின. இந்த திடீர் பேரிடரில் 8 பேர் உயிரிழந்தனர்; 82 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.

தகவல் கிடைத்ததும் தேசிய பேரிடர் மேலாண் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, இடைவிடாது தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதுவரை 24 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
பல இடங்களில் சேறு அடர்த்தியாக இருப்பதால் மீட்பு பணிகள் கடும் சவாலாக நடைபெறுகின்றன.
மலை மற்றும் சரிவு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், மண் உருளும் சத்தம் அல்லது நிலம் நகரும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் சுமத்ரா தீவில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் 1,200 பேரின் உயிரைக் காவு வாங்கியதையும், 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்ததையும் நினைவுபடுத்துகிறது இந்த சம்பவம்.
English Summary
Tragedy Indonesia Floods breached embankments houses swallowed by mud 8 dead 82 missing