"எனது இலக்கில் நான் வென்றுவிட்டேன்" சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன செய்தி! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையின் 5-ம் நாள் கூட்டத்தொடரில், அதிமுக உறுப்பினர்களின் புறக்கணிப்புக்கு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு விரிவான பதிலளித்தார். கடந்த 10 கால அதிமுக ஆட்சியில் சீரழிந்த தமிழகத்தை, தற்போது மற்ற மாநிலங்கள் அண்ணாந்து பார்க்கும் இடத்திற்கு உயர்த்தியுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

மகளிர் விடியல் பயணம்: இத்திட்டத்தின் மூலம் பெண்கள் இதுவரை தோராயமாக ₹60,000 வரை சேமித்துள்ளனர்.

கலைஞர் உரிமைத் தொகை: தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் இதுவரை மொத்தம் ₹29,000 வழங்கப்பட்டுள்ளது.

கலைஞர் கனவு இல்லம்: இத்திட்டத்தின் கீழ் 2 லட்சம் பேருக்கு புதிய வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.

கல்வி & ஓய்வூதியம்: தமிழக மாணவர்கள் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் பயிலும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். மேலும், அரசு ஊழியர்களுக்கு 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை' (APS) அறிவித்துள்ளார்.

முதல்வர் தனது பதவிக்கால அர்ப்பணிப்பை இவ்வாறு விவரித்தார்:

8,000+ அரசு மற்றும் மக்கள் நல நிகழ்ச்சிகளில் பங்கேற்பு. சென்னை தவிர பிற மாவட்டங்களுக்கு மட்டும் 173 முறை நேரடிப் பயணம்.

"மக்களின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி. திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்போது, எங்கள் தற்போதைய சாதனைகளை நாங்களே மிஞ்சும் வகையில் உழைப்போம்," என முதல்வர் உறுதிபடத் தெரிவித்தார்.

தனது இலக்கை அடைந்துவிட்டதாகக் குறிப்பிட்ட முதல்வர், தமிழகத்தின் எதிர்காலம் இன்னும் ஒளிமயமாக இருக்கும் எனத் தனது உரையை நிறைவு செய்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Our Next Term Will Outshine This One CM Stalins Bold Response in Assembly


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->