புதிய காதலி.. புதிய கார்.. ரூ.12 கோடி சொகுசு காரில் வலம் வரும் ஹர்திக் பாண்டியாவின் வீடியோ வைரல்..! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை டி20 2026 தொடரின் இந்தியா சாம்பியன் வென்றுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியதோடு, 03 முறை டி 20 கோப்பையை வென்ற அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது.

அதுவும் சொந்த நாட்டில் கோப்பையை வெல்ல முடியாது, அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானம் ராசி இல்லை என பல்வேறு விமர்சனங்களை தவிடு பொடியாக்கிய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றத்து.

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ரூ. 12 கோடி மதிப்பிலான காரை வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய இந்திய அணி வெற்றிப்பெற்றத்தை அடுத்து, அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் வீரர் ஹர்திக் பாண்டியா தனது ஸ்டைலில் மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடி வருகிறார்.

இந்த வெற்றிக்காகத் தனக்குத்தானே சுமார் ரூ. 12 கோடி மதிப்பிலான Ferrari 12Cilindri எனும் அதிநவீன சூப்பர் காரை பரிசாக வாங்கியுள்ளார். அதன்படி, சமீபத்தில் மும்பை வீதிகளில் தனது புதிய கருப்பு நிற ஃபெராரி காரில், புதிய காதலியும் பிரபல மாடலுமான மஹேகா சர்மாவுடன் அவர் வலம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஹர்டிக் பாண்டியா கார்கள் மற்றும் உயர் ரக வாட்சுகளை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர். இவரிடம் ரூ. 10 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் ஃபாண்டம், லம்போர்கினி உருஸ் மற்றும் மெர்சிடிஸ்-AMG G63 போன்ற பல சொகுசு வாகனங்கள் உள்ளன.

தற்போது புதிய வரவாக இணைந்துள்ள இந்த ஃபெராரி 12Cilindri கார், மணிக்கு 340 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய 6.5 லிட்டர் V12 இன்ஜினைக் கொண்டுள்ளது. இது வெறும் 2.9 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Video of Hardik Pandya cruising in a 12 crore luxury car goes viral


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->