கரூர் கூட்ட நெரிசல் வழக்கு; விஜய்யிடம் 06 மணி நேரமாக சிபிஐ விசாரணை..! - Seithipunal
Seithipunal


கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய், மேற்கொண்ட பரப்புரை கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 41 பேர் உயிரிழந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஜனவரி மாதம் 12 மற்றும் 19-ஆம் தேதிகளில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் விசாரணை நடைபெற்றது.

இதனை தொடர்ந்து மார்ச் 10ஆம் தேதி மீண்டும் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியது. ஆனால், ஏற்கெனவே திட்டமிட்ட பணிகள் இருப்பதால் விஜய் தரப்பில் விலக்கு கோரபட்டது. அதனைத்தொடர்ந்து அவருக்கு விக்கல்லு அளிக்கப்பட நிலையில், மீண்டும் ஆஜராக புதிய சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, இன்று (15ஆம் தேதி) விஜய், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

இன்று சிபிஐ அதிகாரிகள் சுமார் 06 மணி நேரம் விஜய்யிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக கரூர் பிரச்சாரத்திற்கு தாமதமாக வந்தது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வழங்கிய பதில்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்த நிலையில், அதனை மையப்படுத்தி விஜய்யிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அத்துடன், விஜய்யிடம் இன்றும், நாளையும் என இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அவரிடம் இன்றோடு விசாரணை நிறைவடைந்ததுள்ளதாகவும், விஜய் மீண்டும் சென்னை புறப்பட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CBI Interrogates Vijay for 6 Hours


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->