தவெகவுடன் கூட்டணி குறித்து இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை; எடப்பாடி பழனிசாமி..!
Edappadi Palaniswami states that no talks have been held so far regarding an alliance with the TVK
அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி உள்ள தமிழக பாஜக தலைவர் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக டிடிவி தினகரன் மற்றும் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நோன்பு திறப்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர், எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், தவெகவுடன் என்.டி.ஏ. கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில் தெரிவித்துள்ளதாவது; என்.டி.ஏ. கூட்டணியில் விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப்படும். வேட்புமனு தாக்கல் 30-ஆம் தேதி தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இன்னும் 15 நாட்கள் அவகாசம் இருக்கிறது. தேர்தல் வரும்போதெல்லாம் சிறுபான்மையினரை பற்றி முதலமைச்சர் பேசுவார். இவர்களின் ஆட்சி இஸ்லாமியர்களுக்கு என்ன செய்தார்கள்..? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், திமுகவுக்கு பலமே கிடையாது என்றும், அதனால் தான் கடந்த 15 நாட்களில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார் என்றும், இந்தத் தேர்தலில் அவரின் கவர்ச்சிகரமான பேச்சுகள் எடுபடாது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கூட்டணியில் புதிய கட்சிகள் வருவதான வாய்ப்பும், சூழலும் இருக்கிறது என்றும், அதிமுகவும், என்.டி.ஏ. கூட்டணி தலைவர்களும் தவெகவுடன் இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Edappadi Palaniswami states that no talks have been held so far regarding an alliance with the TVK