ஒவ்வொரு குடும்பத்திற்கும் விடியல்: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்த புள்ளிவிவரங்கள்!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 1,724 நாட்களாகத் தனது அரசு படைத்து வரும் சாதனைகளைத் தொகுத்து வழங்கினார். அதிமுகவின் புறக்கணிப்புக்கு மத்தியிலும், மக்கள் நலத் திட்டங்களின் வெற்றியை அவர் ஆணித்தரமாகப் பதிவு செய்தார்.

மகளிர் விடியல் பயணம்: கட்டணமில்லாப் பேருந்து வசதியால் பெண்கள் மாதம் ₹800 முதல் ₹1,200 வரை சேமிக்கின்றனர்.

கலைஞர் உரிமைத் தொகை: 1.31 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000 வழங்கப்படுகிறது. இதுவரை ஒவ்வொரு பயனாளிக்கும் ₹29,000 கிடைத்துள்ளது. இதனைப் பெண்கள் "அண்ணன் கொடுக்கும் சீர்" எனப் பெருமையுடன் அழைப்பதாக முதல்வர் குறிப்பிட்டார்.

மாநில வளர்ச்சி: மற்ற மாநிலங்கள் அண்ணாந்து பார்க்கும் வகையில் தமிழ்நாடு அசுர வளர்ச்சி கண்டுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

தனது ஆட்சிக் காலத்தைப் புள்ளிவிவரங்களுடன் முதல்வர் விளக்கினார்:

கையெழுத்திட்ட கோப்புகள்: 15,117
பங்கேற்ற நிகழ்ச்சிகள்: 8,655
மாவட்டப் பயணங்கள்: 173
நேரடிப் பயனாளிகள்: 44.44 லட்சத்திற்கும் அதிகமானோர்.

"சோதனைகள் எனக்குப் புதிதல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ன செய்தான் என்பது வரலாறாகப் பதிவாகியுள்ளது. நான் ஒவ்வொரு நாளும் மக்களுக்காகவே வாழ்கிறேன்; இது புகழ்ச்சியல்ல, உண்மை." என முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dawn for Every Family CM Stalin Defends Dravidian Model in Assembly


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->