உடல் சொல்லும் கதை: மனஅழுத்தம் உள்ளவர்களின் முக்கிய அறிகுறிகள்
story body tells Key symptoms people stress
ஒருவருக்கு மனஅழுத்தம் இருப்பதை பலர் கவனிக்காமல் தவறிவிடுகிறார்கள். ஆனால் உடல், மனம் இரண்டும் சில முக்கிய அறிகுறிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கத் தொடங்கிவிடும். அவற்றை சரியாக புரிந்துகொண்டால், பெரிய பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே தவிர்க்கலாம்.

கை அல்லது விரல் நடுக்கம்
வேலை எதுவும் செய்யாமல் அமர்ந்திருக்கும் போது, கை அல்லது விரல்கள் தானாக அசைந்து கொண்டிருக்கிறதா? அடிக்கடி இப்படியான நடுக்கம் ஏற்பட்டால், அது மன அழுத்தத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். இந்த அறிகுறியை அலட்சியம் செய்யாமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
திடீர் கண்ணீர்
எந்த சோக காரணமும் இல்லாமல், அமைதியாக இருந்தபோது கண்களில் திடீரென கண்ணீர் வருகிறதா? மனம் காரணமின்றி பாரமாக உணரப்படுகிறதா? இது மனஅழுத்தத்தின் முக்கிய அறிகுறி. இப்படிப்பட்ட நிலை தொடர்ந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
கண் இமை துடித்தல்
கண் இமைகள் காரணமின்றி தொடர்ந்து துடித்துக்கொண்டிருக்கிறதா? இது உடல் சோர்வை மட்டும் அல்ல, மன அழுத்தத்தையும் குறிக்கும் அடையாளமாக இருக்கலாம். வழக்கத்துக்கு மாறாக இமை துடித்தால், உடனே பரிசோதனை செய்து கொள்ளுவது பாதுகாப்பானது.
English Summary
story body tells Key symptoms people stress