77வது குடியரசு தினம்: போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பிரதமர் மோடி தேசிய மரியாதை...!
77th Republic Day PM Modi pays national tribute soldiers who sacrificed their lives war
77-வது குடியரசு தினத்தையொட்டி, நாட்டுக்காக தங்களது உயிரை தியாகம் செய்த போர் வீரர்களை நினைவுகூரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் அமைந்த போர் வீரர்கள் நினைவிடத்துக்கு வந்தார்.

பிரதமரை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மூன்று படைத் தளபதிகள் மரியாதையுடன் வரவேற்றனர்.அந்த நினைவிடத்தில், பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து வீரர்களை மரியாதைச் செய்தார்.
அப்போது அங்கு 2 நிமிடங்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.இதனையடுத்து, பிரதமர் மோடி குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பார்வையிட உள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கூட நிகழ்ச்சியை நேரில் பார்வையிட உள்ளனர்.
இந்த ஆண்டு குடியரசு தினம், வீர வீரர்களின் நினைவையும், நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளின் பெருமையையும் முன்னிறுத்தும் வகையில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
English Summary
77th Republic Day PM Modi pays national tribute soldiers who sacrificed their lives war