டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்பது குறித்து வெள்ளிக்கிழமை இறுதி முடிவு..?
A final decision regarding Pakistans participation in the T20 World Cup will be made on Friday
20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக் கோப்பை தொடர், வரும் பிப்ரவரி 07-ந்தேதி, இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்குகிறது. பாகிஸ்தான் மோதும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடைபெறுகின்றன. இந்தநிலையில், வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்கப்படுவதோடு, 10 க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் ரீதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மோசடைந்துள்ள நிலையில், போராட்டங்களை தொடர்ந்து, கே.கே.ஆர். அணியில் இருந்து முஸ்தபிஜுர் ரஹ்மான் நீக்கப்பட்டார்.
இதனால் பாதுகாப்பு காரணத்தை கூறி இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க முடிவது என வங்கதேச அணி அறிவித்தது. அத்துடன், வங்கதேசம் விளையாடும் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டுகோள் விடுத்தது. ஆனால், இறுதி நேரத்தில் மாற்ற முடியாது என ஐசிசி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் வங்கதேச அணி உலகக் கோப்பை தொடரில் இருந்து உத்தியோக பூர்வமாக வெளியேறியுள்ளது.

இந்த நிலையில், வங்கதேச அணியின் ஆதரவு நிலைப்பாட்டில், பாகிஸ்தான் அணியும் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோஹ்சின் நக்வி, அந்நாட்டு பிரதமருடன் ஆலோசனை நடத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதவியில் கூறியிருப்பதாவது:-
''பிரதமர் ஷெரீப் உடன் ஆக்கப்பூர்வமான ஆலோசனை நடத்தினேன். அப்போது ஐசிசி விசயம் தொடர்பாக அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. உலகக் கோப்பை தொடர்பான அனைத்து சாத்தியக்கூறுகளையும் களத்தில் கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வெள்ளிக்கிழமை அல்லது அடுத்த திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும்.'' என்று நக்வி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணியை உலகக் கோப்பை அனுப்ப வேண்டுமா..? அல்லது இந்தியாவுக்கு எதிரான போட்டியை மட்டும் தவிர்க்கலாமா..? என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
English Summary
A final decision regarding Pakistans participation in the T20 World Cup will be made on Friday