மெக்சிகோ கால்பந்து மைதானத்தில் மர்ம கும்பல் துப்பாக்கிச்சூடு; 11 பேர் பலி; 12 பேர் காயம்..!
Eleven people were killed in a shooting by a mysterious gang at a football stadium in Mexico
மெக்சிகோவில் கால்பந்து மைதானத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மெக்சிகோவின் மோரெலோஸ் மாநிலத்தில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நேற்று இரவு உள்ளூர் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்த போது மைதானத்திற்குள் ஆயுதம் ஏந்திய கும்பல் புகுந்துள்ளது.
அந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாகச் சுட்டதில், 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 12 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணமாக மெக்சிகோவில் செயல்படும் இரண்டு போதைப்பொருள் கடந்த கும்பல்களுக்கு இடையே இருந்த மோதல் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Eleven people were killed in a shooting by a mysterious gang at a football stadium in Mexico