குடியரசு விழாவில் கார்கே, ராகுலுக்கு 03-வது வரிசையில் இருக்கை: வேண்டுமென்றே அவமானப்படுத்தியதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு..!
The Congress party alleges that allocating seats in the third row to Kharge and Rahul at the Republic Day ceremony was a deliberate attempt to humiliate them
இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் கடமைப் பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசியக்கொடி ஏற்றியதை தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நடைபெற்றது. மாநில ஊர்திகளின் அணிவகுப்புகளும் நடைபெற்றன.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி, அமைச்சர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர். எதிர் கட்சியான காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில், கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு 03-வது வரிசையில் இருக்கை அமைக்கப்பட்டிருந்தமைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இது மக்களவை எதிர்க்கட்சி தலைவரை வேண்டும் என்றே அவமானப்படுத்தியதாக விமர்சனம் செய்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளதாவது: 'நாட்டில் எதிர்க்கட்சித் தலைவரை இத்தகைய முறையில் நடத்துவது?, இது எந்தவொரு கண்ணியம், மரபு மற்றும் நெறிமுறைகளின் தரங்களுக்கும் பொருந்துமா?. இது தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தின் விரக்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தமிழகத்தின் விருதுநகர் மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறுகையில்; "ராகுல் காந்தியை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் இது பாஜக-வால் வேண்டுமென்றே செய்யப்பட்டது. 2014-ஆம் ஆண்டு எல்.கே. அத்வானி எங்கு அமர வைக்கப்பட்டிருந்தார் என்று பாருங்கள். இப்போது ஏன் இந்த நெறிமுறை மீறல்.? மோடியும், அமித் ஷாவும் கார்கே மற்றும் ராகுல் காந்தியை அவமானப்படுத்த விரும்புவதால்தான் இது நடந்ததா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
The Congress party alleges that allocating seats in the third row to Kharge and Rahul at the Republic Day ceremony was a deliberate attempt to humiliate them