பெண்கள் பிரீமியர் லீக்; வரலாற்றில் முதல் சதத்தை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை நாட் ஸ்கைவர்-பிரன்ட்..!
Mumbai Indians player Nat Sciver Brunt recorded the first century in the history of the Womens Premier League
பெண்கள் பிரீமியர் லீக் 2026 சீசனில் 16 வது போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆர்சிபி அணி, 04 வது இடத்தில உள்ள மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி மும்பை களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹெய்லே மேத்யூஸ், சஜீவன் சஜனா ஆகியோர் தொடக்க பேட்டர்களாக களம் இறங்கினர். இதில், சஜனா 07 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மேத்யூஸ் உடன் நாட் ஸ்கைவர்-பிரன்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதில், மேத்யூஸ் 39 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய நாட் ஸ்கைவர்-பிரன்ட் அபாரமாக விளையாடி 57 பந்தில் சதம் அடித்தார். இதன்மூலம் பெண்களுக்கான பிரீமியர் லீக் போட்டியில் முதன் முதலில், சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்து வீராங்கனையானா இவர், 16 பவுண்டரி, 1 சிக்சருடன் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரது சதத்தால் மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 04 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்துள்ளது.
English Summary
Mumbai Indians player Nat Sciver Brunt recorded the first century in the history of the Womens Premier League