பெருமை மிகுந்த தருணம்; கைத்தறி துணியால் ஆன உலகின் மிக பெரிய இந்திய தேசிய கொடி; குஜராத்தில் மரியாதை..! - Seithipunal
Seithipunal


உலகின் மிக பெரிய தேசிய கொடியான, கைத்தறி துணியால் ஆன இந்திய தேசிய கொடி குஜராத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

குஜராத்தின் பூஜ் மாவட்டத்தின் எல்லையை ஒட்டிய கட்ச் நகரில் ரான் பகுதியில் தோர்தோ என்ற இடத்தில் இந்த மூவர்ண கொடி, சிறந்த முறையில் காட்சிப்படுத்தப்பட்டு அதற்கு முழு அளவிலான மரியாதையும், பெருமையும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வின் போது மக்கள் திரளாக கூடி தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியபடி காணப்பட்டனர். குறித்த நிகழ்ச்சியை, மத்திய அரசின் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சிறப்புமிக்க மற்றும் உலகின் மிக பெரிய தேசிய கொடிய நம் நாட்டின் மூவர்ண கொடியை காட்சிப்படுத்தியது, தேசத்தின் பெருமை, சுய சார்புக்கான மனவுறுதி மற்றும் இந்தியாவின் கலாசார பாரம்பரிய செறிவுக்கான சிறப்பு வாய்ந்த அடையாளங்களில் ஒன்றாக உருவாகியுள்ளமை பெருமையை சேர்கின்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The worlds largest Indian national flag, made of handloom fabric was honored in Gujarat


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?


செய்திகள்



Seithipunal
--> -->