திருமண ஆசை காட்டி பணிப்பெண்ணை 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த பிரபல நடிகர் கைது..! - Seithipunal
Seithipunal


வீட்டு பணிப்பெண்ணை திருமண ஆசை காட்டி கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பிரபல நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசிக்கும் 41 வயது பெண் ஒருவர், அங்குள்ள பல்வேறு திரைப்பிரபலங்களின் வீடுகளில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கும் நடிகர் நதீம் கான் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு அந்தப் பெண்ணிடம், திருமணம் செய்துகொள்வதாககூறி நெருங்கி பழகியுள்ளார்.

தொடர்ந்து, வெர்சோவாவில் உள்ள தனது வீட்டிலும், அப்பெண்ணின் வீட்டிலும் வைத்து கடந்த 10 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் முதலில் வெர்சோவா காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில்,  சம்பவம் மல்வானி காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடங்கியதால், வழக்கு அங்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 22-ஆம் தேதி நடிகர் நதீம் கான் கைது செய்யப்பட்டார். 

தற்போது போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான ‘துரந்தர்’ என்ற திரைப்படத்தில் அக்லக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து நடிகர் நதீம் கான் பிரபலமானவர். இவர் அமிதாப்பச்சன், சஞ்சய் மிஸ்ரா மற்றும் அடில் ஹுசைன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நாடகங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்துள்ளார்.

நீனா குப்தா மற்றும் சஞ்சய் மிஸ்ரா நடிப்பில் வரும் பிப்ரவரி மாதம் 06-ஆம் தேதி வெளியாகவுள்ள 'வத் 2' என்ற படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த சூழலில் பாலியல் பலாத்காரம் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை ஹிந்தி திரையுலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A popular actor has been arrested for sexually assaulting his maid for 10 years under the pretext of promising marriage


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->