‘ஜன நாயகன்’ ரிலீஸ்: தேர்தலுக்கு முன் சாத்தியமா? - உயர்நீதிமன்றத் தீர்ப்பால் சிக்கல்!
Will Vijays Jana Nayagan Hit Screens Before the 2026 Polls
தவெக தலைவர் விஜய்யின் கடைசித் திரைப்படமான 'ஜன நாயகன்', மார்ச்-மே 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் வெளியாகுமா என்ற கேள்விக்கு விடை கிடைப்பது தற்போது பெரும் சிக்கலாகியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பு, ரிலீஸை மீண்டும் ஒரு சட்டப் போராட்டத்திற்குள் தள்ளியுள்ளது.
சட்டப் போராட்டத்தின் பின்னணி:
தணிக்கை வாரிய முட்டுக்கட்டை: மத ரீதியான காட்சிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் சித்திரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தணிக்கை வாரியம் இப்படத்தை மறுபரிசீலனைக் குழுவுக்கு அனுப்பியது.
நீதிமன்றத் தீர்ப்பு: உடனடியாக 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய தனி நீதிபதி பி.டி. ஆஷாவின் உத்தரவைத் தலைமை நீதிபதி அமர்வு இன்று ரத்து செய்தது. தணிக்கை வாரியம் பதிலளிக்க உரிய கால அவகாசம் (4 வாரங்கள்) அளித்து, வழக்கை மீண்டும் விசாரிக்கத் தனி நீதிபதிக்கே உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் 'ரெட் கார்டு' ?
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தப் படம் வெளியாவதில் மிகப் பெரிய சவால் தேர்தல் நடத்தை விதிகள் (MCC) ஆகும்:
தவெக தலைவர் விஜய் நேரடியாகத் தேர்தலில் போட்டியிடுவதால், இப்படம் வாக்காளர்களைத் தூண்டும் பிரசாரக் கருவியாகவே தேர்தல் ஆணையத்தால் கருதப்படும்.
முன்னுதாரணம்: 2019 மக்களவைத் தேர்தலின் போது மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்திற்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்ததை இங்கு நினைவுகூர வேண்டும்.
பிப்ரவரி இறுதியில் தேர்தல் அறிவிப்பு வர வாய்ப்புள்ளது. நீதிமன்ற விசாரணை முடிய மார்ச் மாதமாகிவிட்டால், வாக்குப்பதிவு முடியும் வரை படத்தை வெளியிடத் தடை விதிக்கப்படலாம்.
தனி நீதிபதி முதல் உச்சநீதிமன்றம் வரை சுழன்று வரும் 'ஜன நாயகன்', தேர்தலுக்குப் பின்னரே தியேட்டருக்கு வரும் என்பதே தற்போதைய களநிலவரம்.
English Summary
Will Vijays Jana Nayagan Hit Screens Before the 2026 Polls