போர், வன்முறை காட்சிகள் மனிதத்தன்மையை அழிக்கின்றன – நிவேதா பெத்துராஜ் கவலை - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ், சமீபத்தில் தனது காதலர் ரஜித் இப்ரானை சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தியிருந்தார். இதனால் அவர் தொடர்பான செய்திகள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தன.

இந்நிலையில், தற்போது உலகம் முழுவதும் நடக்கும் போர் மற்றும் வன்முறை குறித்து தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர்,“செய்தி பார்க்க எந்த தளத்திற்குப் போனாலும், கொலை, போர், கொடுமை காட்சிகள் எளிதாக பரிமாறப்படுகின்றன. நாம்தேடாவிட்டாலும் தினமும் அதை நுகர்கிறோம். இந்த அளவு வன்முறை, நம்முள் உள்ள மனிதத்தன்மையை அழித்து விடும். தகவலை அறிய வேண்டுமென்றால் வேறு வழி தேவை”என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு பலரது கவனத்தையும், ரசிகர்கள் மற்றும் இணையவாசிகளின் கருத்துக்களையும் ஈர்த்து வருகிறது.

சில வாரங்களுக்கு முன், நிவேதா தனது காதலர் ரஜித் இப்ரானுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, அவரை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். துபாயில் தொழிலதிபராகவும், மாடலிங்கிலும் செயல்பட்டு வருகிறார் ரஜித் இப்ரான்.

நிவேதா தனது குழந்தை பருவத்தை துபாயிலேயே கழித்ததாலும், இருவரும் அங்கே சந்தித்திருக்கலாம் என ரசிகர்கள் ஊகிக்கின்றனர்.

இதற்கிடையில், ரஜித் இப்ரான், முன்னாள் பிக்பாஸ் ஜூலியின் முன்னாள் காதலர் என்றும், இதுகுறித்து 2018ஆம் ஆண்டில் ஜூலி பகிர்ந்த புகைப்படங்கள், வாழ்த்துச் செய்திகள் போன்றவை ரசிகர்களால் மீண்டும் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளன.

தனது காதலர் தொடர்பான விவாதங்கள் நடந்து வரும் நிலையில் கூட, உலகில் நடைபெறும் வன்முறை மற்றும் போர் குறித்து மனிதர்கள் உணர்வு இழந்து வருகிறார்கள் என நிவேதா குறிப்பிட்டது, ரசிகர்களிடம் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பலரும், “வன்முறையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சமூகத்தின் மனநிலையை சுட்டிக்காட்டியுள்ளார்” என்று பாராட்டியிருக்க, சிலர் “செய்திகளை தவிர்க்க முடியாது, ஆனால் உண்மைகளைப் புரிந்து கொள்ளும் போது வன்முறை காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்” என கருத்து தெரிவித்துள்ளனர்.

நடிகை நிவேதா பெத்துராஜ், சினிமாவிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பேசுபொருளாக இருக்கும் நிலையில், உலக அமைதிக்காகக் கூறிய இந்தக் கருத்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Scenes of war and violence are destroying humanity Nivetha Pethuraj worries


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->