கரூர் கூட்ட நெரிசல்! "இதயம் தாங்கவில்லை" - நடிகர் கார்த்தியின் உருக்கமான இரங்கல் - Seithipunal
Seithipunal


கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டம் சோகமாக மாறியது. இந்தக் கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உட்பட 39 பேர் உயிரிழந்த இந்த பேரதிர்ச்சி சம்பவம் தமிழகத்தை உலுக்கி வைத்துள்ளது.

இந்த துயரமான நிகழ்வை தொடர்ந்து, அரசியல், சினிமா உலகத்தினர் பலரும் தங்களது இரங்கல்களையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் 'கார்த்தி' தனது ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டதாவது,"கரூரிலிருந்து வந்த துயரச் செய்தி மனதை உருக்குகிறது.

உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் இதயப்பூர்வமான இரங்கல்கள். காயமடைந்த அன்புகள் அனைவரும் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். இனி ஒருபோதும் இவ்வாறான விபரீதம் நடக்காதபடி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்"என்று வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karur stampede My heart couldnt bear it Actor Karthis heartfelt condolences


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->