ஏவுகணை தாக்குதலுக்கு இடையே ஈரானில் நிலநடுக்கம்…! - 4.3 ரிக்டர் அளவு பதிவு - Seithipunal
Seithipunal


மத்திய கிழக்கில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அணுசக்தி போட்டியை மையமாகக் கொண்டு ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதன் விளைவாக மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் அசாதாரணமான போர் சூழல் உருவாகியுள்ளது.இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்து ஈரானும் கடுமையான எதிர்தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

இரு தரப்பினரின் மோதல் தீவிரமடைந்ததால், அப்பகுதியில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது.இதற்கிடையில், ஏற்கனவே போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் நிலநடுக்கமும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க நிலநடுக்கவியல் துறை வெளியிட்ட முதற்கட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

தெற்கு ஈரானில் உள்ள கெராஷ் பகுதியை மையமாகக் கொண்டு, பூமியின் அடிப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அதிர்வு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earthquake hits Iran amid missile attack 4point3 magnitude recorded


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->