டெல்லியில் பரபரப்பு - ஒரே நேரத்தில் விமான நிலையம், பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.!!
bomb threat to delhi airport and schools
கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் விமான நிலையங்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட இடங்களில் பதற்றமான சூழல் நிலவுவதோடு மக்களும் பீதி அடைகின்றனர்.
இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள விமான நிலையங்கள், பள்ளிகள், நிறுவனங்கள் என்று 300-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் விரைந்து வந்தனர். இதற்கு முன்னதாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடைபெற்றது. ஆனால் சந்தேகத்துக்குரிய பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. இருப்பினும், வெடிகுண்டு மிரட்டலால் அந்தப் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.
English Summary
bomb threat to delhi airport and schools