சூப்பர்! மனிதநேயத்தில் உயர்ந்த சூர்யகுமார்...! ரூ.28 லட்சம் பஹல்காம் வீரமரண குடும்பங்களுக்கு நன்கொடை...!
Suryakumar man great humanity Donates Rs 28 lakhs families Pahalgam martyrs
துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதி ஆட்டம் சுவாரஸ்யமாக அமைந்தது.இந்த போட்டியில், முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.
இதனால் இந்தியாவுக்கு 147 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.அதன் பின்னர் விளையாடிய இந்திய அணி தன்னம்பிக்கை நிறைந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

கடைசி ஓவர்வரை பரபரப்பாக நீண்ட இந்த ஆட்டத்தில்,இந்தியா 19.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் குவித்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, ஆசியக் கோப்பையை கைப்பற்றியது.இந்த வெற்றியுடன் தொடரில் 3வது முறையாக பாகிஸ்தானை இந்தியா முறியடித்துள்ளது.
இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இதனிடையே, இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார், “ஆசியக் கோப்பை தொடருக்கான எனது ஊதியத்தை பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், ராணுவ வீரர்களுக்கும் வழங்க விரும்புகிறேன்” என்று அறிவித்துள்ளார்.
மேலும், சூர்யகுமாரின் மனமுவந்த அறிவிப்பு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், அவரின் ஊதியம் ரூ.28 லட்சம் ஆகும்.
English Summary
Suryakumar man great humanity Donates Rs 28 lakhs families Pahalgam martyrs