பேரவலம்! 41 உயிர்களை காவு கொண்ட கரூர் கூட்டம்...! -விஜயைத் தொடர்பு கொண்ட ராகுல் காந்தி
Tragedy Karur mob kills 41 Rahul Gandhi contacts Vijay
கரூர் வேலாயுதம்பாளையத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த அந்த கூட்டம், திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலால் சோகமாக மாறியது.

இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து தற்போது 41 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 82 பேர் கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பேரதிர்ச்சி சம்பவம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் 'ராகுல் காந்தி', த.வெ.க. தலைவர் விஜயை தொலைபேசியில் தொடர்புகொண்டு விசாரித்தார்.
இதில் சுமார் 15 நிமிடங்கள் நீண்ட அந்த உரையாடலில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை ராகுல் காந்தி தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Tragedy Karur mob kills 41 Rahul Gandhi contacts Vijay