சூதாட்ட சிக்கலில் சிக்கிய சினிமா, கிரிக்கெட் நட்சத்திரங்கள்! 'சொத்து முடக்கம்’அமலாக்கத்துறையின் விசாரணை வேட்டை ஆரம்பம்...!
Cinema and cricket stars caught in gambling trouble investigation hunt asset freezing enforcement department begun
மத்திய அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஏற்கனவே தடை விதித்திருந்தாலும், சட்டவிரோதமாக இயங்கும் செயலிகள் மற்றும் இணையதளங்கள் அப்பாவி மக்களை சிக்கவைத்து லட்சக்கணக்கில் பணத்தை இழக்கச் செய்து வருகின்றன. மேலும், பணத்தை இழந்த சிலர் தற்கொலைக்கும் தள்ளப்பட்ட சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு விளம்பர தூதராக இருந்து ஆதரவு அளித்த நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் தற்போது அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக 18 ஆண்டுகளாக உலகளாவிய அங்கீகாரம் பெற்றதாகத் தெரிவிக்கப்படும் ‘1எக்ஸ்பெட்’ செயலி தொடர்பான வழக்கில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதன் பேரில், கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, சுரேஷ் ரெய்னா, ஷிகார் தவான் உள்ளிட்டோர்; இந்தி நடிகர் சோனு சூட், வங்காள நடிகர் அங்குஷ் ஹஸ்ரா, முன்னாள் எம்.பி. மிமி சக்கரவர்த்தி ஆகியோரிடம் அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தாலும், அவர் வெளிநாட்டில் இருப்பதால் ஆஜராகவில்லை.அந்த விசாரணையில், “சூதாட்ட கம்பெனி அவர்களை எப்படிப் பெற்றது? விளம்பரத்தில் நடித்ததற்கான கட்டணம் எங்கு, எப்படி வழங்கப்பட்டது? இந்தியாவில் ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட்டிருப்பது தெரிந்திருந்தும் ஏன் ஒப்பந்தம் செய்தீர்கள்?” என கூர்மையான கேள்விகள் எழுப்பப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த விளம்பரப் பணத்தை சில பிரபலங்கள் கோடிக்கணக்கில் மதிப்புள்ள சொத்துகள் வாங்க பயன்படுத்தியிருப்பதும், வெளிநாடுகளில் -குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் - நிலம் மற்றும் வீடுகள் வாங்கியிருப்பதும் அதிகாரிகளால் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், சட்ட விரோத பணப் பரிமாற்றம் மூலம் குவிக்கப்பட்ட இச்சொத்துகளை குற்றச் செயலின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துகளாக கருதி, அவற்றை முடக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
Cinema and cricket stars caught in gambling trouble investigation hunt asset freezing enforcement department begun