கொள்கை ரீதியாக எதிர்த்திருக்கலாம். அதை விட்டு இப்படியா? - கொந்தளித்த மன்சூர் அலிகான்! - Seithipunal
Seithipunal


விஜய்யை  கொள்கை ரீதியாக எதிர்த்திருக்கலாம். அதை விட்டு இப்படியா? செய்வது என   நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் மன்சூர் அலிகான், ‘ஓடிக் கொண்டே இருடா’ என்ற புதிய ஆல்பம் பாடலை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்து அப்போது கூறியதாவது: “தமிழ்நாட்டில் கரூர் சம்பவம் மனதிற்கு வேதனையாக இருக்கின்றது.  2 நாட்களாக தூங்கவில்லை. எப்படி தூங்க முடியும்? நம்முடைய நாட்டில் இப்படி நடப்பது ரொம்ப அவமானமாக இருக்கிறது. கரூர் சம்பவம் தொடர்ந்து அரசியலாக்குவது உண்மை தானே. 

விஜய்யின் வளர்ச்சி பிடிக்காமல் அவரை நேரடியாக எதிர்க்க வேண்டும் என்றால் கூட்டங்களை நடத்தி கொள்கைரீதியாக எதிர்த்து இருக்கலாம். அதை விட்டு இப்படியா? அயோக்கியத்தனமான அரசியல் தானே இது? சொந்த மண்ணில் சொந்த மக்களைக் காவு கொடுப்பதா? யார் தான் அரசியலுக்கு வர வேண்டும்? என்பதை இன்னும் 6 மாதங்களில் தமிழக மக்கள் தீர்மானிப்பார்கள். அரசியலில் சிலர் திமிங்கிலம் போல அடக்க ஆள் இல்லாதது போல் நடந்து கொள்கிறார்கள்.

நான் விஜய்க்கு ஆதரவு தருகிறேன்.  அருணா ஜெகதீசன் தலைமையான விசாரணை குறித்த விசாரணையால் எதுவும் நடக்காது. முறையாக போலீஸ் பாதுகாப்பு கொடுக்கவில்லை. எந்த கட்சிக்காவது இவ்வளவு நிபந்தனை விதித்தார்களா? இவ்வளவு கெடுபிடி இருந்ததா? 41 பேரின் மரணத்துக்கு விஜய் எந்த பதிலும் சொல்லவில்லை என்று சொல்கிறீர்கள். அவரை தான் அங்கே இருக்க விடாமல் கிளம்ப சொல்லி அனுப்புகிறார்கள். பிறகு எப்படி அவர் பேசுவார்? இது திட்டமிட்ட சதி. தவறு செய்தவன் தண்டனை அனுபவிப்பான். விஜய்க்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியும்” என நடிகர் மன்சூர் அலிகான் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

He may have opposed it on principle. But to go this far? Furious Mansoor Ali Khan


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->