'பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்': ஆதவ் அர்ஜுனா பதிவு சில நிமிடங்களிலேயே நீக்கம்..? - Seithipunal
Seithipunal


கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலரும் காயமடைந்து சிசிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கூட்டநெரிசல் திட்டமிட்ட சதியால் நடந்துள்ளதாக தவெக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த கரூர் சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அரசுக்கு எதிராக போலி செய்தி பரப்புவோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளதில் பதிவிட்ட கருத்தை நீக்கியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டு இருந்ததாவது; 

'சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது... இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. இளைஞர்களும், Genz தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.

அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!" என்று பதிவிட்டு இருந்தார். ஆனால், இதை பதிவிட்ட சில நிமிடங்களிலேயே அதை நீக்கியும் உள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Adhav Arjunas social media post deleted within minutes


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->