'தவெக கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவேண்டும்': மதுரை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்..!
Petition filed in Madurai court seeking cancellation of partys recognition
கரூரில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் நடத்திய மக்கள் சந்திப்பில் கூட்ட நெரிசல் ஏற்பட்டத்தில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிந்துள்ள சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து தமிழக வெற்றிக் கழக கட்சியை ரத்து செய்யவேண்டும் என வழக்கு தொடர்ப்பட்டுள்ளது.
அதாவது கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமான தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்து, பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மதுரை மானகிரியை சேர்ந்த வக்கீல் செல்வகுமார் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், விடுமுறை கால நீதிமன்ற அலுவலருக்கு இ-மெயில் மூலம் மனு அனுப்பியுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: 'கடந்த 27-ஆம் தேதி கரூரில் நடிகர் விஜய்யின் பிரசாரம் நடந்தது. சுமார் 10 ஆயிரம் பேர் மட்டும் பங்கேற்பர் எனக்கூறி அனுமதி பெற்றுள்ள நிலையில், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் நெரிசலான இடத்தில் கூடியிருந்தனர். அலட்சியம், சட்டப்பூர்வ அனுமதிகளை மீறியதன் விளைவாக, சிறுவர்கள், பெண்கள் உள்பட 41 பேர் உயிர் இழந்துள்ளனர்.
ஒரு வழக்கில், சிறுவர்களை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிட்ட மும்பை நீதிமன்றம், இது தொடர்பாக கடுமையான வழிகாட்டுதல்களை வகுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

இருந்தபோதிலும் நடிகர் விஜய்யின் கரூர் கூட்டத்தில் சிறுவர்கள், பெண்கள் பங்கேற்பதை தடுக்க தவறிவிட்டனர். இதன் விளைவாகத்தான் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, 41 பேர் பலியாக காரணமான தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்து, பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.'என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, குறித்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளை விடுமுறைகால நீதிமன்றத்திற்கான பதிவுத்துறையின் பரிசீலனைக்கு பிறகு விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிகிறது.தெரிய வருகிறது.
English Summary
Petition filed in Madurai court seeking cancellation of partys recognition