நவராத்திரி விழா காலத்தில் கோவிலை காவல் காக்கும் சிங்கம்: வீடியோ வைரல்..!
Video of lion guarding temple during Navratri festival goes viral
குஜராத்தில் இந்து கோவில் முன் நடு ராத்திரியில் சிங்கம் ஒன்று கோவிலுக்கு காவல் இருப்பது போன்ற வீடியோ வனத்துறை அதிகாரி (ஐபிஎஸ்) பிரவீன் காஸ்வான் என்பவர் பகிர்ந்துள்ளார். அதாவது, 27 வினாடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ பகிர்ந்துள்ள அவர், 'என்ன ஒரு தெய்வீக காட்சி. சிங்கம் கோவிலுக்கு காவல் இருப்பது போல் தோன்றுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ள இந்த விடியோவை சிலர் இது ஏ.ஐ. வீடியோவாக இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒரு சாரார் இந்த வீடியோ வனவிலங்குகளுக்கும், இப்பகுதியின் கலாச்சார மரபுகளுக்கும் இடையிலான வலுவான பிணைப்பைக் காட்டுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர். துர்க்கையின் வாகனமான சிங்கம் ஹிந்து கோவிலை காவல் காப்பது போல உள்ள இந்த வீடியோ நவராத்தி விழா காலத்தில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Video of lion guarding temple during Navratri festival goes viral