செய்வதறியாது தன்னந்தனியாக நடுரோட்டில் புலம்பி தவித்த புஸ்ஸி ஆனந்த்..!
Pussy Anand who was alone and suffering in the middle of the road
கடந்த 27 ஆம் தேதி சனிக்கிழமை இரவு தவெக தலைவர் விஜய் கரூரில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு பிரசாரம் மேற்கொண்டிருந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 உயிரிழந்துள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தினையடுத்து ஆதவ் அர்ஜுனா, அருண், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் எங்கே போனார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக முக்கியமான விவரங்கள் வெளியாகியுள்ளன.
அதாவது அந்த துயர சம்பவம் நடந்த போது புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் இருந்ததாகவே கூறப்படுகிறது. ஆனால், அவரும் அவசரமாக அங்கிருந்து தப்பித்ததாக கூறப்பட்டது. அதாவது, தேசிய நெடுஞ்சாலையில், தனது காரை நிறுத்திய புஸ்ஸி ஆனந்த் நடுரோட்டில் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்த வீடியோ தற்போது வைராலாகியுள்ளது.

சம்பவத்தை நினைத்து அவர், என்ன செய்வது என்று தெரியாமல் நடுரோட்டில் நின்று புலம்பிக் கொண்டிருப்பதும், அவரை பின்தொடர்ந்து சென்ற பத்திரிகையாளர்களை அவரது உதவியாளர் ஒருவர் சந்திக்க விடாமல் தடுத்ததும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
நடுரோட்டில் நின்று கொண்டிருந்த புஸ்ஸி ஆனந்த்தை சந்திக்க பத்திரிகையாளர் ஒரு முற்பட்ட்டுள்ளார். அப்போது அவரது உதவியாளர் தடுத்து, 'என்ன பண்றது என்றே தெரியவில்லை. நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். காலில் கூட விழுகிறேன்.. தயவு செய்து பேட்டி எதுவும் எடுக்க வேண்டாம் அண்ணே..' என்று கூறுகிறார்.
மேலும், இத்தனை உயிர்கள் போயிருக்கிறது, பத்திரிகையாளர்கள் மனிதாபமானத்துடன் நடந்து கொள்ளுங்கள், என்ன பண்றது..? ஏது பண்றது..? என்றே தெரியாமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம், சூழ்நிலை சரியில்லை..வேண்டாம் என்று தடுத்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
English Summary
Pussy Anand who was alone and suffering in the middle of the road