''அங்கு எல்லாம் மிதக்கிறது: விண்வெளி நிலையத்தில் மொபைல் போன் கூட கனமாக தெரிந்தது:'' சுபான்ஷு சுக்லா பேட்டி..!
Even the mobile phone seemed heavy in the space station Subhanshu Shukla interview
அண்மையில், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர், அங்கு ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு, பத்திரமாக பூமி திரும்பியுள்ளனர். இந்த பயணத்திற்கு பின்னர் முதல் முறையாக தற்போது சுபான்ஷூ சுக்லா, ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியுள்ளதாவது:
அதாவது, விண்வெளி நிலையத்தில் புவி ஈர்ப்பு விசை காரணமாக, மொபைல் போன் கூட கனமாக தெரிந்தது என கூறியுள்ளார். அத்துடன், நாங்கள் பூமியை விட்டு வெளியேறிய முதல் முறை, ஈர்ப்பு விசை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். திடீரென்று அது போய்விட்டது. நமது உடல் பூஜ்ஜிய ஈர்ப்பு விசைக்கு ஏற்ப மாறுவதற்கு நேரம் எடுக்கும் என்றும், திரும்பி வரும்போதும் இதுவே நடக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மனித உடல் எடையை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் நிலைப்படுத்துவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மூன்று முதல் நான்கு நாட்களில், அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக கூறியுள்ளார். அங்கு எல்லாம் மிதக்கிறது, சோதனைகள் வெற்றிகரமாக செய்யப்பட வேண்டும். சில சோதனைகள் மேற்கொண்ட போதே நல்ல முடிவுகள் கிடைத்தன என்றும், அவ்வாறான சோதனையின் போது கிடைத்த நல்ல முடிவுகள் ஊக்கமளித்தது என்றும் பேசியுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது சேகரிக்கப்பட்ட அறிவியல் மாதிரிகள் மற்றும் தரவுகள் ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுக்லா குறிப்பிட்டுள்ளார். மேலும், விண்வெளி, அறிவியல் மற்றும் மருத்துவத்தை முன்னேற்றுவதில் இந்தப் பயணத்தின் பங்களிப்பை வலியுறுத்தி, கண்டுபிடிப்புகள் குறித்து விரைவில் விரிவாகப் விவாதிக்க நடத்த ஆவலுடன் இருப்பதாகவும் அவர் மேலும் பேசியுள்ளார்.
அத்துடன், அவர் தன்னை சாதாரணமாக உணர்வதாகவும், மற்றொரு விண்வெளிப் பயணத்திற்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
English Summary
Even the mobile phone seemed heavy in the space station Subhanshu Shukla interview