கட்சிகள் வரும் போகும்.. இதுதான் என்னோட போக்கஸ் - கமல்காசன் பரபரப்பு பேட்டி.!!
mp kamalhaasan press meet in chennai airport after came from parliment
பிரபல நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கூட்டத்தொடரில் பங்கேற்றுவிட்டு சென்னைக்குத் திரும்பினார். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் தெரிவித்ததாவது:-
"வெளியில் இருந்து கூர்மையாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த இடத்தை உள்ளே இருந்து பார்க்கிறேன். அதில் உள்ள கடமை புரிகிறது. பெருமை புரிகிறது. நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்று புரிகிறது. என்னுடைய முனைப்பு முதலில் நாடு, தமிழ்நாடு. இதுவே நாடாளுமன்றத்தில் எனது போக்கஸ். இதற்காகத்தான் நான் போய் இருக்கிறேன்.

இது முக்கியமான பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். சரிவர என் கடமையை செய்வேன் என்று நினைக்கிறேன். ஆணவக் கொலைகள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் இருந்தே நடந்து வருகிறது. நம்முடைய சமுதாய அமைப்பு அப்படி. அதை மாற்ற வேண்டும். கட்சிகள் வரும் போகும் நாடு நடந்து கொண்டுதான் இருக்கும்" என்றுத் தெரிவித்தார் .
English Summary
mp kamalhaasan press meet in chennai airport after came from parliment