உடைந்த கண்ணாடிபோல் தான்...ஓ.பி.எஸ், டி.டி.வி மீண்டும் இணைவது...!- சாடிய செல்வப்பெருந்தகை
Even if OPS and TTV reunite it like broken glass Slammed Selva Perunthakai
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிளவு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. இதில் ஓ.பன்னீர்செல்வத்தின் விலகலுக்கு பின், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை, “இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

அதேசமயம், பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, “ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரனின் விலகல் அறிவிப்பு இறுதி முடிவாக இருக்காது” என தனது நம்பிக்கையை தெரிவித்தார்.
இருப்பினும், தமிழக காங்கிரஸ் தலைவர் 'செல்வப்பெருந்தகை', பா.ஜ.க. கூட்டணியை கடுமையாக தற்போது விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,“ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் மீண்டும் கூட்டணியில் சேர்ந்தாலும், அது உடைந்த கண்ணாடியை ஒட்டி வைத்ததைப்போல் – கீறல்களுடன், மிருதுவில்லாமல் இருக்கும்” என்று அவர் சாடியுள்ளார்.
English Summary
Even if OPS and TTV reunite it like broken glass Slammed Selva Perunthakai