விசாரணைக்கு சென்ற பெண்ணை ஆசைக்கிணங்க அழைத்த போலீசார் - திருச்சியில் பரபரப்பு.!
women petition against police officer for harassment in trichy
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்ற இளம்பெண் அங்குள்ள உதவி காவல் ஆய்வாளர் தன்னை உல்லாசத்துக்கு வருமாறு அழைத்ததாக கூறி, சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், காவல் நிலையத்துக்கு சென்ற என்னிடம் அங்கு பணிபுரிந்த உதவி காவல் ஆய்வாளர் புகார் தொடர்பாக விசாரித்தார். பின்னர் என்னிடம், `நீ உனது கணவரை காதல் திருமணம் செய்து 3 குழந்தைகள் பெற்றுள்ளாய்.

நீ உயர்ந்த சாதி தானே, தாழ்ந்த சாதியை சேர்ந்தவனை திருமணம் செய்து பிள்ளையை பெற்றிருக்க, உனக்கு எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எனது ஆசைக்கிணங்க வேண்டும். இல்லையென்றால் உன் மனுவை விசாரிக்காமல் நான் காலதாமதமாக அலைக்கழிப்பேன்' என்று கூறினார்.
உடனே நான் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்து நடந்தவற்றை வெளிமாநிலத்தில் லாரி ஓட்டி வரும் தன் கணவரிடம் செல்போன் மூலம் தெரிவித்தேன் என்று அழுதுகொண்டே கூறியுள்ளார். இளம்பெண்ணின் இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வந்ததால் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
women petition against police officer for harassment in trichy