தமிழகத்தில் 15 ஆம் தேதிவரை மழை நீடிக்கும்: தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Chennai IMD Rain Alert
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வட தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் மழை நீடிக்க வாய்ப்புள்ளது.
இன்று (நவம்பர் 9, 2025):
தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள்: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களின் மலைப் பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டம்.
நவம்பர் 10 முதல் 12 வரை:
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி.
நவம்பர் 13:
தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி.
நவம்பர் 14 மற்றும் 15:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை நிலவரம்:
இன்றும், நாளையும் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33°C-ஐ ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26°C-ஐ ஒட்டியும் இருக்கும்.