ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அஞ்சுவது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! - Seithipunal
Seithipunal


சீனா ஊடுருவல் பற்றி பேச அனுமதி மறுத்ததால் மக்களவையில் அத்துமீறியதாக தமிழக எம்.பி.க்கள் உள்பட 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசு அஞ்சுவது ஏன்?

கேள்விக்கு பதில் அளிக்கவும், தேசிய பாதுகாப்பு, பொருளாதார நலன்கள் குறித்து தெளிவுப்படுத்தவும் அரசு தயாராக இருக்க வேண்டும்.

கேள்வி எழுப்பிய எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவதற்கு எம்.பி.க்கள் அவையில் இருப்பது அவசியம்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுக்க இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MK Stalin Congress rahul PM Modi BJp


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->