சென்னையில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்க 'ஜூஸ் கடை பெண் தொழிலாளி' நியமனம் குறித்து பாஜக புகார்
SIR Chennai BJP Complaint
சென்னை வேளச்சேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 87-வது வார்டில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட பூத் லெவல் ஆபிஸர் (BLO) ஒருவர், ஒரு ஜூஸ் கடையில் பணிபுரிபவர் என்றும், இத்தகைய நியமனங்களால் எஸ்.ஐ.ஆர். (SIR) எனப்படும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் குளறுபடிகள் ஏற்படுவதாகவும் பா.ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக, பா.ஜனதா மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், மாவட்டத் தேர்தல் அதிகாரியான மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளார்.
அதில், வேளச்சேரி தொகுதி, பூத் எண் 87-க்கு பி.எல்.ஓ.வாக நியமிக்கப்பட்ட சுபாஷினி என்பவரைத் தொடர்புகொண்டு விசாரித்தபோது, அவருக்குப் பல் வலி இருந்ததால், விண்ணப்பங்களை விநியோகிக்கும் பணியைத் தன் மகனை வைத்தே செய்ததாகத் தெரிவித்துள்ளார். சுமார் 50 விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
பி.எல்.ஓ.வாக நியமிக்கப்பட்ட சுபாஷினி, ஒரு ஜூஸ் கடையில் வேலைப் பார்ப்பதாகவும், கொரோனா காலத்தில் இருந்தே மாநகராட்சியில் 'ஏதேனும் இப்படி வேலைன்னா கூப்பிடுவாங்க. போவேன்' என்ற அடிப்படையில் இந்த வேலைக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஜூஸ் கடையில் வேலை பார்ப்பவர்கள், சத்துணவு ஆயாக்கள், கொசு மருந்து அடிப்பவர்கள் போன்றவர்களுக்கு, வாக்காளர் திருத்தப் பணிகள் குறித்த எந்த அடிப்படை விவரமும் தெரியவில்லை. இத்தகைய நபர்கள் திருத்தப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டிய இந்தத் திருத்தப் பணிகள் குளறுபடிகளுடன் நடைபெறுவதால், மாநகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு, 100 சதவீதம் தவறில்லாத உண்மையான வாக்காளர் பட்டியலை வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
SIR Chennai BJP Complaint