சூப்பர்! சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பாசிட்டிவா இருந்தது... அதைக் கண்டு மகிழ்கிறேன்!!!- ஏ.ஆர் முருகதாஸ்
Super Sivakarthikeyans development was positive Im happy to see that AR Murugadoss
தமிழ் திரையுலக முன்னனணி நடிகர் 'சிவகார்த்திகேயன்' தனது 23-வது படமான 'மதராஸி' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்கிறார்.

கூடுதலாக வித்யூத் ஜம்வால், டான்சிங் ரோஸ் சபீர், விக்ராந்த், பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைத்திருக்கிறார்.இந்த மதராஸி' திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனிடையே, இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகயுள்ளது.இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் பங்கேற்றார். அப்போது, சிவகார்த்திகேயன் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நெகிழ்ச்சியாக பதிலளித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ்:
அவர் தெரிவித்ததாவது, "மான் கராத்தே படத்தின் போது, தொலைக்காட்சியிலிருந்து வந்த ஒரு நடிகராக சிவகார்த்திகேயனை நான் கண்டேன். அந்த சமயத்தில் அவர் 6 படங்களை பண்ணியிருப்பார். எந்தவொரு பேக்ரவுண்டும் இல்லாமல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என வரும் பல நடிகர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக மாறியுள்ளார்.
திறமையும், கடின உழைப்பும் இருந்தால் போதும் ஜெயிச்சிடலாம் என்பதற்கு சிவகார்த்திகேயன்தான் ஒரு நம்பிக்கை. மதராஸி படத்திற்காக அவரை பார்த்து பேசும்போது அவருடைய வளர்ச்சி பாசிட்டிவா இருந்தது. சிவகாரத்திகேனின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
English Summary
Super Sivakarthikeyans development was positive Im happy to see that AR Murugadoss