ஜோடியாக வந்த விஜய்-திரிஷா; 'மரியாதை மறைந்துவிடும்' என பிரபல நடிகை மற்றும் தயாரிப்பாளர் கடும் எதிர்ப்பு..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விஜய். தற்போது முழு நேர அரசியலில் இறங்கியுள்ளதால் சினிமாவுக்கு முழுக்கு போட்டுள்ளார். அவரின் கடைசி படமான ஜன நாயகன் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை காரணமாக இன்னும் வெளிவராமல் உள்ளது.

இதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய்க்கு அவர் அரசியல் வருகைக்கு பின்னர் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. அதிலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பாபத்திற்கு பின்னர் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.

இந்த சூழலில் அவரின் 27 வருட காதல் மனைவி சங்கீதா அண்மையில் விஜய்யை விவாகரத்து கோரி செய்ல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் விஜய்க்கு வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு உள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மனுதாக்கல் மீதான விவாதங்கள் சமூகவலைதளத்தில் பேசும் பொருளாகியுள்ளது. அதுவும் இணையவாசிகள் திரிஷா தன அந்த நடிகை என அவரையும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற திருமண விழாவில் விஜய் - த்ரிஷா ஒன்றாக பங்கேற்ற வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விஜய்யும் - நடிகை த்ரிஷாவும் ஒரே காரில் ஒரே நிறத்திலான பட்டாடையை அணைத்தபடி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். 

முன்னதாக மனைவி சங்கீதா தொடர்ந்துள்ள விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் த்ரிஷாவுடன், விஜய் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருப்பது இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திரிஷாவுடன்,விஜய் திருமண விழாவில் பங்கேற்றது குறித்து நடிகை சனம் ஷெட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

அதாவது. "இல்லை! இது சரியான வழி கிடையாது. மனைவியின் துயரத்தை இப்படி அலட்சியப்படுத்த முடியாது. ஒரு நீண்ட கால ரசிகையாக, இந்த நேரத்தில் இதைப் பார்ப்பது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது!" என்று பதிவிட்டுள்ளார்.

இவரை தொடர்ந்து, பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயனும் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

"அதிகாரமும் புகழும் வரும்போது, அதனுடன் பொறுப்புணர்வும் சேர்ந்தே வரும்" – இது ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் வரும் பிரபலமான வசனம். அதிக புகழ்பெற்ற மனிதர்களுக்கு, மக்கள் நேர்மையாகவும் மரியாதையுடனும் வாழ்வதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டிய பெரும் பொறுப்பு உள்ளது. அதை அவர்கள் மறக்கும்போது, மக்கள் அவர்கள் மீது வைத்திருக்கும் மரியாதையை இழக்கிறார்கள்.

ஒவ்வொரு மனிதருக்கும் குடும்பமே முதன்மையானது. குடும்பத்தை அலட்சியப்படுத்தும் போதோ அல்லது மனரீதியாகவோ, உணர்ரீதியாகவோ காயப்படுத்தும் போதோ, அவர்கள் மீதான அன்பும் மரியாதையும் மறைந்துவிடும். இத்தகைய செயல்களை எந்தச் சூழலிலும் நியாயப்படுத்தவோ அல்லது சாதாரணமான ஒன்றாகக் கருதவோ முடியாது.

குடும்ப மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நபராக, ஒருசில முன்னணி நடிகர்கள் தங்களின் செயல்கள் மூலம் தங்களைப் பின்பற்றும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்குத் தவறான முன்மாதிரியாக இருப்பதைப் பார்த்து நான் மிகுந்த மனவேதனை அடைகிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Famous actress and producers oppose Vijay and Trisha pairing


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->