வெள்ளை மாளிகையில் மத போதகர்கள் பிரார்த்தனை; ஈரான் போரில் டிரம்புக்காக எடுத்த முடிவு..! - Seithipunal
Seithipunal


அணு ஆயுத போட்டி மற்றும் அணு ஆயுத ஒப்பந்தம் தொடரில் ஈரானுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க இறங்கியுள்ளது. இதற்காக இஸ்ரேல் கூட்டு சேர்ந்துள்ள அமெரிக்கா ஈரான் மீது வான்வெளி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த தாக்குதலுக்கு ஈரானும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனால் ஈரானின் உச்ச தலைவர் காமேனி உள்ளிட்ட 600 கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் இதுவரை அமெரிக்க வீரர்கள் 6 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க பொதுமக்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அனைத்து கிறிஸ்தவ மத போதகர்களையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்த  சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்.

அதாவது ஈரான் உடனான போரில் டிரம்பிற்கு பலத்தை கொடுக்க வேண்டுமென மத போதகர்கள் பிரார்த்தனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஓவல் அலுவலகத்தில் டிரம்ப் பகிரங்கமாக பிரார்த்தனையில் ஈடுபடுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Religious preachers pray at the White House


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->